ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.
பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார்கள். மேலும் அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இந்த திரைப்படம் வரும், அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. நட்பை மையமாக கொண்ட முதல் பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் முதல் பாடல் வெளியாகவுள்ளது. தமிழில் உருவாகும் நட்பு என தொடங்கும் முதல் பாடலை எம் எம் கீரவாணி இசையில், இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இதனால் ரசிகர்கள் பாடலுக்காக காத்துள்ளனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…
சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…
பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில்…