வலிமை திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு.?

வலிமை திரைப்படத்தின் முதல் பாடல் (Lyric Video) இன்று இரவு 10 மணிக்குப் பிறகு வெளியாகிறது.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமை த்துள்ளார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஜூலை 11-ஆம் தேதி வெளியானது . வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், அடுத்ததாக வலிமை படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, வலிமை திரைப்படத்தின் முதல் பாடல் (Lyric Video) இன்று இரவு 10 மணிக்குப் பிறகு வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
ஏற்கனவே மோஷன் போஸ்டர் வெளியீடும் போது எந்த அறிவிப்பும் இல்லாமல் வெளியிடப்பட்டது அதைபோல் வலிமை முதல் பாடலும் வெளியாகலாம் என்பதால் அஜித் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்துள்ளனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.