அனிருத் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் முதல் பாடல் வெளியானது.
நெல்சன் திலீப்குமார் இயக்கி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற “டாக்டர்” திரைப்படத்திற்கு பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
டான் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
காமெடி என்டர்டெய்னரான இப்படம் கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ளது. முன்னதாக, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், அனிருத் இசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டான் படத்தின் முதல் சிங்கிள் டிராக் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் முதல் பாடல் வெளியானது.
டங்காமாரி ஊதாரி மற்றும் ஆளுமா டோலுமா புகழ் ரோகேஷ் எழுதிய “ஜலபுலஜங்கு” என்ற முதல் சிங்கிள் இன்று மாலை வெளியிடப்பட்டது. “ஜலபுலஜங்கு” என்ற டான் படத்தின் முதல் பாடல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…