5,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் பிளேக் தொற்று ஏற்பட்ட நபரின் உடலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஐரோப்பாவில் 1347 ஆம் ஆண்டு முதல் 1351 ஆம் ஆண்டு வரை கொடிய நோயான பிளேக் நோயால் பல லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர் என பிரிட்டானிக்கா இணையதளம் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த தீவிர நோய்த்தொற்றால் ஐரோப்பாவின் மக்கள் தொகையில் பாதி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய நோய் பல நூற்றாண்டுகளாக பரவி வந்து அப்போது இருக்கும் மக்களை கொன்று குவித்துள்ளது. ஐரோப்பாவில் கிட்டத்தட்ட லட்சக்கணக்கான மக்கள் இந்த பிளேக் நோயால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சுமார் 5,000 வருடங்களுக்கு முன்னர் பிளேக் நோயால் உயிரிழந்தவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியாவில் லாட்வியா பகுதியை சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலில் பிளேக் நோய் இருந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிளேக் நோயால் இறந்தவர்களில் இவர் மிக பழமையானவர் என்று தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் பால்டிக் பெருங்கடலில் கலக்கும் சலக் நதிக்கரையோரத்தில் அமைந்துள்ள மயானத்தில் 4 பேரின் உடலை கண்டெடுத்துள்ளனர். அந்த நால்வரின் எலும்புகள் மற்றும் பற்களை பரிசோதனை செய்துள்ளனர்.
இவர்களுக்கு ஏதும் வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை சோதித்துள்ளனர். அதில் ஒருவருக்கு அணில் போன்ற கொறிக்கும் பிராணியால் உருவான பிளேக் நோயின் திரிபு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த பாக்டீரியா, புபோனிக் பிளேக்காக மாற்றியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், கண்டுபிடிக்கப்பட்ட அந்த நபர் சுமார் 5,300 வருடங்கள் பழமை வாய்ந்தவர். அதனால் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…