கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா திரைப்படமும் ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு முடிந்த பின்னரும் திரையரங்குகள் திறக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது ஆகும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது .இதனால் பல பிரபலங்களின் படங்களை ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன அதில் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த பட படங்களை OTT platform-ல் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் முதற்கட்டமாக நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள பொன் மகள் வந்தாள் படத்தையும், கீர்த்தி சுரேஷின் பெங்குயின் படத்தையும் அமேசான் பிரேமில் ரிலீஸ் செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் என்ற படத்தையும் அமேசான் பிரேம் நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கியதாகவும், ஓடிடியில் வெளியிடவுன் ள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிகர் மாதவன், அஞ்சலி, மைக்கேல் மேட்சன், சுப்புராஜ், ஷாலினி பாண்டே மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பீப்ள் மீடியா ஃபாக்ட்றி தயாரிக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்தது.இந்த படம் ஓடிடியில் ஐந்து மொழிகளிலும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமே OTT பிளாட்பாரத்தில் வெளியாகும் முதல் பான்-இந்தியா திரைப்படமாகும். இந்த படம் மட்டுமின்றி கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா திரைப்படமும் ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. தொடர்ந்து பல முன்னணி நடிகைகளின் படங்கள் ஆன்லைனில் வெளியிடப்படுவதால் திரையரங்க உரிமையாளர்கள்கள் சற்று கவலையில் உள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…