பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியீடு.!
பிசாசு 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 இயக்குனர் வெற்றி மாறன் வெளியீடுகிறார்.
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான பிசாசு. திகில் நிறைந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. நல்ல வசூல் சாதனையும் செய்தது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த பிசாசு -2 படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் பிசாசு 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றி மாறன் வெளியீடுகிறார்.