விஜய் நடிக்கும் 68-வது படத்தின் first look வெளியானது..!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தளபதி 68’ . இது நடிகர் விஜயின் 68-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் பிரசன்னா, பிரபுதேவா, லைலா, ஸ்னேகா, வைபவ், பிரேம் ஜி, மோகன், மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். நீண்ட நாட்களாக காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு விஜய் நடிக்கும் 68-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இப்படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. விஜய் நடிக்கும் 68-வது படத்திற்கு ‘The Greatest Of All Time’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் பைலட் கெட்டப்பில் இரண்டு தோற்றங்களில் இருப்பதால் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்