விண்வெளியில் உருவாகும் முதல் திரைப்படம் – அக்டோபர் முதல் படப்பிடிப்பு..!!

Default Image

இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ இயக்கத்தில் வைசவ் என்ற புதிய திரைப்படம் விண்வெளியில் உருவாகவுள்ளது. 

விண்வெளியில் ஒரு புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கான ஆயுத்த வேலைகளில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. விண்வெளியில், உருவாகும் இந்த திரைப்படத்திற்கு வைசவ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை, பிரபல இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ இயக்குவார் என்றும் கதையின் படத்தில் கதாநாயகியாக யுலியா பெரெசில்ட் நடிப்பதாகவும் ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்கோமாஸ் கடந்த மே மாதம் அறிவித்திருந்தது.

மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த விவரங்களை ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்கோமாஸ் அறிவித்துள்ளது.

இதில் ” வைசவ் படத்திற்காக இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ மற்றும் கதாநாயகியாக யுலியா பெரெசில்ட்  இருவரும வருகின்ற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், ‘சோயூஸ் எம்.எஸ்.19′ விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்