அனல் பறந்த ஆரம்ப விவாதம்..அடுத்தடுத்த தாக்கு..அதிபர் தேர்தல் அலசல்

Default Image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் – ஜோபிடன் இடையே முதல்முறையாக நேரடி விவாதம் தொடங்கியது.

தேர்தலுக்கு முன்னதாக அதிபர் வேட்பாளர்களுக்கிடையே 3 விவாதங்கள் பல இடங்களில் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு முதல் விவாதம் ஓஹியோவில் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தில் ஆரம்பமே  அனல் பறக்கும் விமர்சனங்களை எல்லாம் ஜோ பிடன் முன்வைத்தார். டிரம்பின் தவறான கையாளும் திறனால் அமெரிக்காவில் 2.05 லட்சம் பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகிவிட்டனர் என்றும்  இன்னும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனா சோதனை மேற்கொள்ள முடியாமல் போராடுகிறார்கள் என்று விளாசினார் ஜோபிடன்.

கொரோனா வைரஸ் குறித்து ஜோ பிடன், டிரம்பை விமர்சித்து வந்தார். அப்போது அவர் கிருமிநாசினியை ஊசி மூலம் செலுத்தினால் கொரோனா வராது என்று டிரம்ப்  ஒரு முறைகூறியிருந்ததை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதற்கு டிரம்ப் அதை நான் கேலிக்காகத்தான் சொன்னேன் என்று மறுமொழி கூறிய நிலையில்  நீங்கள் டெலாவேர் மாகாணத்துக்கு செல்லுங்கள். ஆனால் நீங்கள் படித்த கல்லூரியின் பெயரை மறந்துவிட்டீர்கள். இனி ஸ்மார்ட் என்ற வார்த்தையை எப்போதுமே பயன்படுத்தாதீர்கள் என டிரம்பும் பதிலுக்கு பதில் விமர்சித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்