நேபாளத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு.. பெண் பலி.!
நேபாளத்தில் கொரோனாவுக்கு 29 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உலகம் முழுவதும் தினமும் குறைந்தபட்சம் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், நமது நாட்டின் அண்டை நாடான நேபாளமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் 290-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். இதுவரை இங்கு யாரும் உயிரிழக்காமல் இருந்த நிலையில், தற்போது முதல் உயிரிழப்பு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி 29 வயதுடைய கர்ப்பிணி ஒருவருக்கு குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்துஅடுத்த மறுநாளே தாய், சேய் இருவரும் வீடு திரும்பினர். ஆனால், அப்பெண் வீட்டில் இருந்தபொழுது, காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதனால், கடந்த 14-ம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த பெண் உயிரிழந்து விட்டார். பின்னர் நடத்திய பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுவே நேபாளத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.