சூரரை போற்று படத்தினை பார்த்து விட்டு கூறிய முதல் விமர்சனம் .!
சூர்யாவின் சூரரை போற்று படத்தினை பார்த்து விட்டு சென்சார் போர்டு முதல் விமர்சனத்தை கூறியுள்ளது .
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டிரைலர் மற்றும், தீம் மியூசிக் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இப்படம் மே-1 ரிலீஸ் தேதி ஆக இருந்தது ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது . ரீலிஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
மேலும் இத்திரைப்படம் தெலுங்கில் “ஆகாசம் நீ ஹதுரா” என்ற பெயரில் ரிலீசாகவுள்ளது.
சமீபத்தில் இந்த சூரரைப் போற்று படத்திற்கு சென்சார் board U சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது .இந்த படத்தினை பார்த்த சென்சார் போர்டிலுள்ள குழுவினர் கூறிய முதல் விமர்சனம் என்னவென்றால் ,இப்படத்தில் வருகின்ற மாறா கதாபாத்திரம் சூர்யாவிற்கு பொருத்தமாக இருப்பதாகவும் ,படம் நன்றாக இருப்பதாகவும் கூறி இயக்குனரையும் ,சூர்யாவையும் பாராட்டியுள்ளனர்.