கிட்டத்தட்ட 10 வருடங்களில் பதிவான முதல் போலியோ… அமெரிக்கா கொடுத்த விளக்கம் இதோ..
அமெரிக்காவில் கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது முதல் போலியோ தொற்று ஒரு நபருக்கு கண்டறியப்பட்டது.
உலக அளவில் ஒரு காலத்தில் அச்சுறுத்திய வைரஸ் என்றால் அது போலியோ. இந்த போலியோவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அதனை உலகம் முழுக்க பிறக்கும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி ஆரம்ப காலகட்டத்திலேயே போடப்பட்டு வருகிறது.
அதன் காரணமாக, போலியோ நோய் பெரும்பாலும் குறைந்து உள்ளது. ஆனால், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 10 வருடங்களில் முதல் போலியோ கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு போலியோ தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு இப்போது தான் முதல் போலியோ கண்டறியப்பட்டது. அவர் போலியோ தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர் என அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.