கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசை தடுத்து நிறுத்த முதல் தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்துள்ளதாக நேற்று முன்தினம் ரஷியா அறிவித்தது.
இந்நிலையில், மாஸ்கோவில் ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த தடுப்பூசி தானாக போட்டுக்கொள்ள முன்வருவோருக்கு போடப்படும். ஏற்கனவே ஏறத்தாழ 20 சதவீத டாக்டர்கள் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி தேவைப்படாது என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ரஷிய மக்களின் தேவைக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…