#D43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை முதல் ஆரம்பம்.!!

Default Image

தனுஷ் நடிக்கவுள்ள D43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது. 

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான  கர்ணன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜகமே தந்திரம் திரைப்படம் கடந்த ஜூன் 18 ஆம் தேதி ஓடிடியில் வெளியானது. இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்துள்ளார்.

அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு தி க்ரே மேன் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த D43 திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகைமாளவிகா மோகனன் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில், D43 திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை முதல் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான 70% காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்திற்கான டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்