டிரம்ப் – ஜோ பிடன் விவாதம்… விரிவான விவரங்கள்…

Published by
Kaliraj

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் வரும் மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இருவரும் மறிமாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதன் விவரம்.

ஜோ பிடன் கூறியுள்ள குற்றச்சாட்டுகள்: 

  • அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய வரியை கூட  கட்டவில்லை.
  • தவறான வழிகளில் டிரம்ப் குடும்பம் சம்பாதித்துள்ளது.
  • டிரம்ப் சீனா உதவியுடன் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்.
  • சீனாவில் அதிபர் டிரம்புக்கு ரகசிய வங்கி கணக்குகள் உள்ளன.
  • அமெரிக்க தேர்தலில் குறுக்கிட வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. முக்கியமாக ரஷ்யா தலையீடு செய்கிறது.
  • வடகொரியா அதிபர் கிம் நல்ல மனிதர் என டிரம்ப் கூறுகிறார்.
  • ஒபாமா கேர் காப்பீட்டு திட்டம் சிறப்பானது.
  • அதிபர் டிரம்பால் அமெரிக்காவில் ஒரு கோடி பேர் காப்பீட்டை இழந்துவிட்டனர்.
  • தனியார் நிறுவன காப்பீட்டு திட்டத்தை உருவாக்குவேன்.
  • கொரோனாவால் மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர்.
  • அமெரிக்காவில் வரும் மாதங்களில் மேலும் 2 லட்சம் பேர் கொரோனாவால் இறப்பார்கள்
  • கொரோனாவை எதிர்த்து போராட டிரம்பிடம் எந்த திட்டமும் இல்லைடிரம்ப் கூறியுள்ள குற்றச்சாட்டுகளான:
  • அதிபராகும் முன்பே என்னுடைய சீன வங்கிக்கணக்கை மூடிவிட்டேன்.
  • கோடிக்கணக்கில் முன்கூட்டியே வரி செலுத்தி விட்டேன்.
  • அமெரிக்காவில் கொரோனாவால் இறப்போர் விகிதம் குறைந்துள்ளது.
  • கொரோனாவில் இருந்து 99% இளைஞர்கள் குணமடைந்துள்ளனர்.
  • கொரோனாவுடன் வாழ மக்கள் கற்றுக்கொண்டனர்.
  • இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிடும்.
  • அமெரிக்காவில் கொரோனா பரவ நான் காரணமில்லை. தவறு செய்தது சீனாதான்.
  • அமெரிக்காவில் வெளிநாட்டவருக்கு அனுமதி அளிப்பதுடன் பள்ளிகளையும் திறக்க வேண்டும்.
  • சீனா, ரஷியா, உக்ரைனிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை.
    இவ்வாறு ஜோ பிடன் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்தார்.
Published by
Kaliraj

Recent Posts

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…

8 hours ago

பரபரக்கும் ஈரோடு இடைதேர்தல்! 3 பறக்கும் படை தயார்… ரூ.50,000-க்கு மேல் ஆவணங்கள் கட்டாயம்…

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…

8 hours ago

நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.!

நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…

10 hours ago

அதிர்ச்சி காட்சி… கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!!

துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…

11 hours ago

ஈரோடு இடைத்தேர்தல் : திமுகவுக்கு சிபிம் ‘முதல்’ ஆதரவு!

சென்னை :  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…

11 hours ago

இனிமேல் சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்.. இந்த பூண்டு பொடியே போதும்..!

சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…

11 hours ago