டிரம்ப் – ஜோ பிடன் விவாதம்… விரிவான விவரங்கள்…

Default Image

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் வரும் மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இருவரும் மறிமாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதன் விவரம்.

ஜோ பிடன் கூறியுள்ள குற்றச்சாட்டுகள்: 

  • அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய வரியை கூட  கட்டவில்லை.
  • தவறான வழிகளில் டிரம்ப் குடும்பம் சம்பாதித்துள்ளது.
  •  டிரம்ப் சீனா உதவியுடன் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்.
  •  சீனாவில் அதிபர் டிரம்புக்கு ரகசிய வங்கி கணக்குகள் உள்ளன.
  •  அமெரிக்க தேர்தலில் குறுக்கிட வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. முக்கியமாக ரஷ்யா தலையீடு செய்கிறது.
  •  வடகொரியா அதிபர் கிம் நல்ல மனிதர் என டிரம்ப் கூறுகிறார்.
  •  ஒபாமா கேர் காப்பீட்டு திட்டம் சிறப்பானது.
  •  அதிபர் டிரம்பால் அமெரிக்காவில் ஒரு கோடி பேர் காப்பீட்டை இழந்துவிட்டனர்.
  •  தனியார் நிறுவன காப்பீட்டு திட்டத்தை உருவாக்குவேன்.
  •  கொரோனாவால் மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர்.
  •  அமெரிக்காவில் வரும் மாதங்களில் மேலும் 2 லட்சம் பேர் கொரோனாவால் இறப்பார்கள்
  •  கொரோனாவை எதிர்த்து போராட டிரம்பிடம் எந்த திட்டமும் இல்லைடிரம்ப் கூறியுள்ள குற்றச்சாட்டுகளான:
  •  அதிபராகும் முன்பே என்னுடைய சீன வங்கிக்கணக்கை மூடிவிட்டேன்.
  •  கோடிக்கணக்கில் முன்கூட்டியே வரி செலுத்தி விட்டேன்.
  •  அமெரிக்காவில் கொரோனாவால் இறப்போர் விகிதம் குறைந்துள்ளது.
  •  கொரோனாவில் இருந்து 99% இளைஞர்கள் குணமடைந்துள்ளனர்.
  •  கொரோனாவுடன் வாழ மக்கள் கற்றுக்கொண்டனர்.
  •  இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிடும்.
  •  அமெரிக்காவில் கொரோனா பரவ நான் காரணமில்லை. தவறு செய்தது சீனாதான்.
  •  அமெரிக்காவில் வெளிநாட்டவருக்கு அனுமதி அளிப்பதுடன் பள்ளிகளையும் திறக்க வேண்டும்.
  •  சீனா, ரஷியா, உக்ரைனிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை.
    இவ்வாறு ஜோ பிடன் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்