வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசியுள்ளார்.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 6- ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில், இந்த திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியது ” “வெந்து தணிந்தது காடு’ படம் இதுவரை சிம்பு செய்திராதது. அவரது அணைத்து நடிப்பைபும் ஒரே படத்தில் வெளிப்படுத்தும் படைப்பாக இருக்கும். இந்த படத்தின் கதையை இயக்குநர் கௌதம் மேனன் என்னிடம் கூறும்போது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அவரது வழக்கமான கதைகளில் இருந்து வேறு விதமான திரைக்கதையை கொண்டிருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
தலைப்புக்கு நியாயம் செய்யும் படைப்பாக 100 சதவீதம் இப்படம் இருக்கும். இந்த படத்தின் திரைக்கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். ஆகஸ்ட் 6 அன்று படப்பிடிப்பு, திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியில் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …