விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்த்தேன். ஒரு வருடம் கழித்து மறுபடியும் திருவிழாவுக்கு வந்தது போன்ற உணர்வு காணப்படுகிறது. விஜய் அவர்களுக்கு ஒரு மாஸ்டர் பீஸாக இந்த படம் அமைந்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் நேற்று வெளியான நிலையில், படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ஒரு வருடத்திற்கு பின்பு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் மிகவும் மகிழ்ச்சியுடன் திருவிழா கோலம் போல இப்படத்தை திரையரங்குகளில் சென்று கண்டுகளித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரன், மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள், முதல் காட்சியை கண்டு களித்தேன். இதுகுறித்து, படத்தை பாராட்டி தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘எங்கள் ஊரில் முதல் நாள் முதல் காட்சியை, விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்த்தேன். ஒரு வருடம் கழித்து மறுபடியும் திருவிழாவுக்கு வந்தது போன்ற உணர்வு காணப்படுகிறது. விஜய் அவர்களுக்கு ஒரு மாஸ்டர் பீஸாக இந்த படம் அமைந்துள்ளது. இப்படத்தில் விஜய் மிகவும் பிரமாதமாக நடித்துள்ளார். இந்த மாதிரியான ஒரு திரைக்கதையை விஜய் அவர்களுக்கு லோகேஷ் கனகராஜ் செய்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் திரைக்கதையை கையாண்ட விதம் ஒவ்வொரு கேரக்டரையும் கையாண்ட விதம் மிகவும் அருமையாக இருந்தது. குறிப்பாக விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை அவர் மிகவும் அழகாக கையாண்டுள்ளார் என இப்படத்தை பாராட்டியுள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…