மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவு..! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.!
சிம்பு நடிப்பில் உருவாகி வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்று முழுவதுமாக முடிந்துள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
படத்தின் மூன்று லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர், டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முழுவதுமாக முடிந்துள்ளது. இதனை, படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ளதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கொண்டாடத்தின் போது நடிகர் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார். அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Finally, its a wrap. Thnx to my wonderful team! @SilambarasanTR_ @vp_offl @sureshkamatchi@thisisysr@kalyanipriyan@iam_SJSuryah@Premgiamaren@ACTOR_UDHAYAA@Anjenakirti@MahatOfficial @manojkumarb_76 @Richardmnathan@UmeshJKumar @silvastunt@johnmediamanagr
#Maanaadu pic.twitter.com/KIKYUlP0Gb— sureshkamatchi (@sureshkamatchi) July 9, 2021