நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று மாஸ்டர் படத்தின் டீசர் சன் தொலைக்காட்சியின் யூடுயூப் சேனலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுடன் , இந்திய அளவில் அதிக லைக்குகளை பெற்ற டீசர் என்ற சாதனையையும் படைத்தது.
மாஸ்டர் படத்தினை ஓடிடி-யில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடவே திட்டம். மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியாவதை தற்போதைய சூழலில் சரியாக இருக்கும். ஓடிடியிலிருந்து எங்களை அணுகிய போதும் திரையரங்கில் மாஸ்டரை வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம். ரசிகர்கள் எதிர்பார்க்கும் மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்களும் எதிர்பார்த்துள்ளோம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ் திரைப்படத்துறையை மீட்டெடுக்க திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாஸ்டர் படம் எதில் வெளியீடு எப்போது வெளியீடு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…