“சியான் 60” படத்தை 75 நாட்களில் முடிக்க திட்டமிட்ட படக்குழு..!
விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள அவரது 60 வது படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 75 நாட்களிற்குள் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்.
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் மணி ரத்தனம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துவிட்டு. கோப்ரா படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக இன்று ரஷ்யா செல்கிறார்.கோப்ரா படத்தை முடித்துவிட்டு மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைவார். அதற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 60 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் மற்றும் நடிகரான துருவ் விக்ரமும் இணைந்து நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. கேங்க் ஸ்டார் படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ள்ளார். மேலும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 75 நாட்களிற்குள் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை வாணிபோஜன் நடிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.