போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை! பிரபல நடிகை ட்வீட்!
விவசாயிகள் போராடுவது சரியில்லை. போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை. போலீசார் விவசாயிகளுக்கு பதிலடி கொடுப்பதும் தவறில்லை. போலீசாரும் மனிதர்கள் தான்.
தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து 2 கடந்த மாதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி வந்த நிலையில், விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கு இடையே தள்ளு ஏற்பட்டது. இதனால், காவல்துறையினர் விவசாயிகளை சரமாரியாக அடித்துள்ளனர்.
இந்நிலையில், காவல்துறையினரின் இந்த அராஜக செயலை கண்டித்து, பிரபலங்கள் பாலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘விவசாயிகள் போராடுவது சரியில்லை. போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை. போலீசார் விவசாயிகளுக்கு பதிலடி கொடுப்பதும் தவறில்லை. போலீசாரும் மனிதர்கள் தான் என்பதை விவசாயிகள் மதிக்க வேண்டும். எல்லா கதைகளுக்கும் இரு பக்கம் இருக்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.