மகனின் திருமணம் குறித்து அப்பாவான டி. ஆரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சிம்பு லண்டனை சேர்ந்த கோடீஸ்வர வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்ததும் திருமணம் நடைபெறும் என்ற செய்திகளுக்கு அப்பாவான டி. ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
சிம்பு தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் 2 மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது . தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சிங்கப்பூரில் நடந்து வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.
சமீபத்தில் இவர் விரைவில் திருமணம் செய்ய போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. சிம்பு தாய் உஷா, அவரது நெருங்கிய சொந்தக்கார பெண் ஒருவரை மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சிம்புவின் நெருங்கிய நண்பரான விடிவி கணேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விரைவில் சிம்புவிற்கு திருமணம் இருக்கும் என்று கூறியிருந்ததாகவும் பார்த்தோம் .மேலும் இன்று சமூக வலைத்தளங்களில் இவர் திருமணம் செய்யவிருக்கும் பெண் லண்டனை சேர்ந்தவர் என்றும், ஒரு கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பெண் சிம்புவின் குடும்பத்திற்கு தூரத்து சொந்தம் என்றும், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்தது திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தது .
இந்த நிலையில் தற்போது சிலம்பரசனின் தந்தையும், நடிகருமான டி. ராஜேந்திரனன் மற்றும் அவரின் மனைவியுமான உஷா அவர்கள் மகனின் திருமணம் குறித்த உண்மையை அறிவித்துள்ளார். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது, எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மைதன்மை அற்றவை. எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்ணை பார்த்து கொண்டிருக்கிறார், பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இதிலிருந்து சிம்புவிற்கு திருமணம் என்று கூறியது முற்றிலும் வதந்தி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)