பிரபல நடிகையின் தந்தையும், இயக்குநருமானவர் காலமானார்.!

பிரபல நடிகையான சரண்யா அவர்களின் தந்தையும், பிரபல மலையாள இயக்குநருமான ஏ. பி. ராஜ் காலமானார்.
தமிழ் சினிமாவில் நாயகன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் சரண்யா. அதனையடுத்து பல படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்த இவர் இயக்குநர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியிருக்கு இரண்டு மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவரது தந்தையான ஏ. பி. ராஜ் மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களையும், தமிழில் துள்ளி ஓடும் புள்ளிமான், கை நிறைய காசு உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். 95 வயதான இவர் இன்று காலமாகியுள்ளார். தற்போது இவருக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025