முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ள தற்போது பிரிட்டனில் அதிக வேகத்துடன் பரவி வருவதாக பிரிட்டன் சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட பி.1.617 கொரோனா வைரசுக்கு டெல்டா என உலக சுகாதார அமைப்பால் பெயரிடப்பட்டது. இந்த டெலடா வகை கொரோனா பல நாடுகளுக்கு பரவியிருப்பதாக அண்மையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த டெல்டா வகை கொரோனா பிரிட்டனில் அதிக வீரியத்துடன் பரவி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து தெரிவித்துள்ள பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த வியாழக்கிழமை வரையில் ஒட்டுமொத்தமாக பிரிட்டனில் புதிதாக 12,431 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 5,472 பேர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது. முதன் முதலாக பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனாவை விட டெல்டா வகை கொரோனா மிக அதிகளவில் அருவி வருவதால், அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகம் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…