பிரிட்டனில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை கொரோனா!

Default Image

முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ள தற்போது பிரிட்டனில் அதிக வேகத்துடன் பரவி வருவதாக பிரிட்டன் சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட பி.1.617 கொரோனா வைரசுக்கு டெல்டா என உலக சுகாதார அமைப்பால் பெயரிடப்பட்டது. இந்த டெலடா வகை கொரோனா பல நாடுகளுக்கு பரவியிருப்பதாக அண்மையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த டெல்டா வகை கொரோனா பிரிட்டனில் அதிக வீரியத்துடன் பரவி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து தெரிவித்துள்ள பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த வியாழக்கிழமை வரையில் ஒட்டுமொத்தமாக பிரிட்டனில் புதிதாக 12,431 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 5,472 பேர் டெல்டா  வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாக  தெரிவித்துள்ளது. முதன் முதலாக பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனாவை விட டெல்டா வகை கொரோனா மிக அதிகளவில் அருவி வருவதால், அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகம் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Sunil Gavaskar
Bengaluru
Lokesh Kanagaraj - Vijay
mugamathu kaif about pant
Donald Trump - Kamala Haaris
gold price 5.11.2024