முகநூலில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த சில நிமிடங்களில் குண்டு வெடிப்பில் சிக்கிய பிரபல தொலைக்காட்சிச் செஃப் குடும்பத்தினர்
நேற்று ஈஸ்டர் பண்டிகையை யொட்டி பல தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தது. இலங்கையில் உள்ள சில முக்கிய தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
நேற்று இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், தெமட்டகொடா குடியிருப்பு பகுதி, கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் உள்ளிட்ட நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290 உயிர் இழந்தனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சிச் செஃப் ஆக பணி புரிபவர் சாந்த மாயாதுன்னே. இவர் நேற்று காலை ஷாங்கிரி லா நட்சத்திர ஹோட்டலில் அவரது குடும்பத்துடன் ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு காலை உணவு சாப்பிட சென்றார்கள்.
அப்போது சாந்த மாயாதுன்னே மகள் நிசங்கா மாயாதுன்னே தனது குடும்பத்துடன் ஷாங்கிரி லா நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்தார்.
அவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த சில நிமிடங்களில் குண்டு வெடிப்பில் சிக்கி குடும்பத்துடன் உயிர் இழந்தனர்.