‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்.!நடிப்பது இந்த பிரபல நடிகர்களா.?

அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரபல தயாரிப்பாளரான ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளத்தில் மெகா ஹிட்டடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும்.சச்சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜூ மேனன் முக்கிய வேடத்தில் நடித்து படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.இதனை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.
அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் உரிமையை பொல்லாதவன், ஜிகர்தண்டா ஆகிய படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கி தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது.இந்த நிலையில் அவரே இந்த படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் பிருத்விராஜ் மற்றும் பிஜூ மேனன் நடித்த கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் சரத்குமார் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தயாரிப்பாளரான கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸின் ருத்ரன் எனும் படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025