இளையராஜா அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று வெங்கட் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜா அவர்கள் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தது மட்டுமில்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் செய்துள்ளார். 5 முறை தேசிய விருதையும், பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இளையராஜா அவர்களுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்க வேண்டும் என்று பிரபல இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு அவர்கள் நடித்து முடித்துள்ள திரைப்படம் லாக்கப். ஆகஸ்ட் 14ம் தேதி ஓடிடியில் வெளியாகும் இந்தப் படத்தினை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு அவர்கள், தன்னுடைய பெரியப்பாவான இளையராஜாவிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய விருது பெற்ற இயக்குநர்கள் பலர் இணைந்து இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…