பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் வெற்றி மாறன் வெளியீடுகிறார்.
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான பிசாசு. திகில் நிறைந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. நல்ல வசூல் சாதனையும் செய்தது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த பிசாசு -2 படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிசாசு 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஆகஸ்ட் -3 மாலை 6 மணிக்கு ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது நாளை மாலை 6 மணிக்கு பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தேசிய விருது வென்ற இயக்குனர் வெற்றி மாறன் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி மாறன் ஆடுகளம், அசுரன் ஆகிய திரைப்படங்களுக்கு தேசிய விருது வாங்கி இருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…