இணையதளத்தில் 55 லட்சம் ஃபலோவர்ஸ்களைக் கொண்ட மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை இறந்தது.
சமூக வலை தளத்தில் இந்தப் பூனையை பின்தொடரும் பல மில்லியன் பேருக்கு, இதன் இறப்பு செய்தியை இந்தப் பூனையின் சொந்தகாரர் மைக் பிரிடாவ்ஸ்கி கடந்த திங்கள்கிழமை அறிவித்தார். குமிழ் வடிவான கண்கள் எப்போதும் முன்னே நீட்டி இருக்கும் நாக்கு என வழக்கத்திற்கு மாறான தோற்றத்தை கொண்டிருந்ததால் இதற்கு லில் பாப் பூனை என்றும் இது மிகவும் பிரபலமானதாகும்.
காட்டு பூனைக் குட்டியாக மீட்கப்பட்ட இந்த பூனை வளர்ச்சிக்குறைவு நோய் (குள்ளத்தன்மை) உள்பட பல உடல்நல பிரச்சனைகளோடு பிறந்திருந்தது. லில் பாப் பூனை வாழ்ந்தபோது, விலங்குகளுக்கு சேவை செய்வதற்கு ஏழு லட்சத்திற்கு அதிகமான டாலர் நிதி திரட்டுவதற்கு உதவியாக இருந்தது. உலக விலங்குகளின் நலத்திலும், உலக நாடுகளிலுள்ள மில்லியன்கணக்கான மக்களிடமும் லில் பாப் பூனை பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவு குறிப்பிடுகிறது.
இயற்கைக்கு அப்பாற்பட்டு அதிகமான கை அல்லது கால் விரல்கள் கொண்டதாக இந்த பூனை இருந்தது. ஒவ்வொரு பாதத்திலும், ஒரு விரல் கூடுதலாகவும், சரியான வளர்ச்சியுறாத தாடையையும், மற்றும் பற்கள் இல்லாததால் நாக்கு வெளியே நீட்டி கொண்டு இருந்தது.
அதிக கவனம் பெற்றதால் இந்தப் பூனை பற்றி அதிக கட்டுரைகள் எழுதப்பட்டன. அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்புகளும் விடுக்கப்பட்டன. பத்திர ஒப்பந்தங்களையும், வணிக ஒப்பந்தங்களையும் பெற்ற இந்த பூனை, யு டியூப் நிகழ்ச்சிகள் மற்றும் ஆவணப்பட தொடர்களையும் உருவாக்க காரணமாகியது. இறப்புக்கு முன்னர் இந்தப் பூனை எலும்பு நோய் தொற்றால் துன்பப்பட்டு வந்தது. இதன் உடல் நலம் பற்றிய தகவல்களை 24 லட்சம் பேர் பின்தொடர்ந்த இதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரிடாஸ்கி பகிர்ந்து வந்தார்.
ஃபேஸ்புக்கில் இந்தப் பூனையை 30 லட்சம் பேருக்கு மேலானோர் பின்தொடர்ந்தனர்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…