சிம்பு நடிக்கவுள்ள நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான கீர்த்தி சனோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். இதில் நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படத்தை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். இந்த படத்தினை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது நதிகளிலே நீராடும் சூரியன் படத்தை குறித்து கிடைத்த தகவலின் படி, இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான கீர்த்தி சனோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. கீர்த்தி சனோன் தில்வாலே, பரேலி கி பர்ஃபி, லூகா சுப்பி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…