தளபதி-65ல் விஜய்க்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதி 65 படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதனை அதிகாரப்பூர்வமாக்குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
ஆம் தளபதியின் அடுத்த படத்தை நான்காவது முறையாக முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்வதாகவும், எஸ். தமன் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன தற்போது ரசிகர்களின் ஒரே கேள்வி ஹீரோயின் யார் என்பது தான். அந்த வகையில் தற்போது தளபதி – 65ல் மடோனா செபாஸ்டின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர் தமிழில் காண்பது, ஜூங்கா, காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…