ஹரி இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை.!

Default Image

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் ராஷி கன்னா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, விக்ரமுடன் ராஷிகன்னா இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

தமிழ் சினிமாவில் பல கமர்ஷியல் படங்களை ரசிகர்களுக்கு அளித்தவர் ஹரி.சமீபத்தில் இவர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.அருவா என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் ராஷி கன்னா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.ஆனால் அந்த திரைப்படம் சில பல காரணங்களால் கைவிடப்பட்டதை அடுத்து அவரது மச்சானும் ,நடிகருமான அருண் விஜயை வைத்து கிராமப்புற கதையை இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஹரி நான்காவது முறையாக பிரபல நடிகரான விக்ரம் அவர்களை வைத்து படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஏற்கனவே நடிகர் விக்ரமை வைத்து சாமி ,அருள்,சாமி-2 உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இயக்குனர் ஹரி அருவா படத்தின் கதையை விக்ரமிடம் கூறியதாகவும் ,அவர் கதை பிடித்து போக ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது .மேலும் இந்த படத்தில் முன்பு கமிட்டாகியிருந்த ராஷி கன்னா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகர் விக்ரமுடன் இணைந்து ராஷி கன்னா நடிப்பது இதுவே முதல் முறையாகும்.ஏற்கனவே இவர் துக்ளக் தர்பார்,மேதாவி , அரண்மனை-3 உள்ளிட்ட 5 படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

DMKProtest
CBSE Exam
Rohit sharma - Ravindra Jadeja - Virat kohli
Loksabha Opposition leader Rahul gandhi
kuldeep or chakaravarthy
PinkAuto
Vijay - Annamalai -Seeman