ரஜினி தன்னை கிண்டல் செய்ததாக பல வருடங்கள் கழித்து ரகசியத்தை கூறிய பிரபல நடிகை…!

Published by
Ragi

நடிகர் ரஜினி நடிகை மீனாவை கிண்டல் செய்ததை 36 வருடங்கள் கழித்து கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. அதனையடுத்து இவர் ரஜினியின் எஜமான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனையடுத்து பல முன்னணி ஹீரோகளுடன் நாயகியாகவும் நடித்து ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அடுத்து திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகிய இவர், மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத் துள்ளார். தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் ரஜினி தன்னை தன் அம்மாவிடம் கிண்டல் செய்ததாக 36 வருடங்கள் கழித்து கூறியுள்ளார். ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே. நடராஜ் இயக்கத்தில் 1984ல்  வெளியான திரைப்படம் அன்புள்ள ரஜினிகாந்த். இந்த படத்தில் அம்பிகா முக்கிய கதா பாத்திரத்திலும், மீனா குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருப்பார்கள். இந்த படம் நேற்றைய முன்தினம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப பட்டது. அப்போது இந்த படத்தில் நடித்த நல்ல நினைவுகளை நடிகை மீனா சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நடிகை அம்பிகா மீது பால் ஊற்றும் காட்சியையும், ரஜினி அவர்கள் சாக்லேட் கொடுக்கும் போது அதை மீனா கடித்து துப்புவதை போன்ற காட்சியையும் குறிப்பிட்ட மீனா, அதனுடன் தனது குண்டான உருவத்தை கேலி செய்யும் விதத்தில் தன்னுடைய அம்மாவிடம் ‘நீங்கள் எந்த கடையில் அரிசி வாங்குகிறீர்கள் என்று கேட்டு ரஜினி காந்த் கிண்டல் செய்ததையும் கூறியுள்ளார். இதுநாள் வரை அவர் கிண்டல் செய்த ரகசியத்தை யாரிடமும் கூறவில்லை என்றும், தற்போது தான் இதனை பற்றி கூறியதாகவும் கூறியுள்ளார். ரஜினி காந்த் மீனாவை கிண்டல் செய்ததாக கூறிய இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது

Published by
Ragi

Recent Posts

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

7 hours ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

8 hours ago

“மாஸ் மட்டுமில்லை…அதுவும் இருக்கு” குட் பேட் அக்லி குறித்து உண்மையை உடைத்த ஆதிக்!

சென்னை :  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

8 hours ago

நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்…3 பேர் அதிரடி கைது!

மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…

9 hours ago

டி-ஷர்ட் அணிய தடையா? இதுதான் அவர்கள் கொடுக்கும் மரியாதை! கனிமொழி பேட்டி!

டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…

10 hours ago

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

10 hours ago