நித்தீன் அவர்கள் தனது நிச்சயதார்த்தத்தை சிம்பிளாக முடித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகரான நித்தீன் தனது காதலியான ஷாலினி என்பவருடனான திருமணத்தை துபாயில் வைத்து ஏப்ரல் 15 மற்றும் 16 தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதில் பங்கேற்க பிரபல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.ஆனால் லாக்டவுன் மற்றும் கொரோனா தொற்று காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இவர்களது திருமணம் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வரும் ஜூலை 26ம் தேதி இரவு 8.30மணிக்கு ஹைதராபாத்தில் வைத்து நடைபெற உள்ளதாக அறிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது இவர்களது நிச்சயதார்த்தத்தை எளிமையாக ஒருவருக்கொருவர் மோதிரத்தை மாற்றி செய்து கொண்டனர். அந்த புகைப்படத்தை நித்தீன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் 8வருடங்களாக காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரபலங்கள் பலர் இந்த தம்பதியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…