வெகு விரைவில் இன்ஸ்டாகிராமில் ஷாப்பிங் செய்ய முடியாது.! அதிரடி முடிவு.!
பிப்ரவரி முதல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வேறு ஷாப்பிங் தளம் செல்லும் வசதி நிறுத்தி வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் அவ்வப்போது தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே, ஷாப்பிங் தளங்களின் விளம்பரங்கள் இன்ஸ்டாகிராமில் வரும் அதனை நாம் கிளிக் செய்தால், அது அந்த ஷாப்பிங் தளத்தின் பக்கம் சென்றுவிடும் .
நேற்று இன்ஸ்டாகிராம் தரப்பில் கூறுகையில், பிப்ரவரி 2023 முதல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்திற்கு தாவும் வசதி நிறுத்தப்படும் எனவும், புதிய ரீலிஸ் உருவாக்க கீழே இருக்கும் கூட்டல் பொத்தான் இடம் மாற்றி வைக்கப்படும் எனவும், இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.