இருவரின் காதலை நிராகரித்த பின் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இங்கிலாந்து பெண்மணி!
இருவரின் காதலை நிராகரித்ததற்காக பாகிஸ்தானில் வசித்து வந்த இங்கிலாந்தை சேர்ந்த 25 வயது பெண்மணி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முந்தைய காலங்களில் எல்லாம் ஒரு பெண்ணிடம் சென்று தனது காதலை ஆண்கள் கூறிய பின்பு அந்த பெண்ணை நிராகரித்தாலும் எப்படி அந்த பெண்ணை சம்மதிக்க வைக்கலாம் அந்தப்பெண் விரும்பும்படி நாம் எப்படி மாறலாம் என்பதற்காக ஆண்கள் தங்களை வருத்திக் கொள்வதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஒரு ஆண் பெண்ணிடம் சென்று எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்று கூறிய பின், பெண் அதை நிராகரிக்கிறாள் என்றால் உடனடியாக எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆசிட் அடிப்பதும், கத்தியால் குத்தி கொலை செய்வது, கற்பழித்து கொலை செய்வது என பல கொடூரமான செயல்களை சில ஆண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த 25 வயதுடைய இங்கிலாந்து பெண்மணி மெய்ரா என்பவர் தன்னிடம் வந்து காதலை கூறிய இரண்டு நபர்களிடம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தற்போது இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் மாமா இது குறித்து கூறுகையில், சாத் அமீர் பட் மற்றும் ஜாஹித் ஜாதுன் ஆகிய இருவர் மெய்ராவிடம் அவர்களது காதலை கூறியதாகவும், ஆனால் இதற்கு அவள் மறுப்பு தெரிவிக்கவே நீ கடுமையான பின்விளைவுகளை சந்திப்பாய் என அப்பொழுதே அவளிடம் அவர்கள் சொன்னதாக கூறியுள்ளார். இதனையடுத்து காவல் துறையினரின் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர், சாதி அமீர் பட் மீது தான் அதிகம் சந்தேகம் உள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.