இங்கிலாந்து அணி தொடர்ந்து ஏழு போட்டிகளில் 300 ரன்கள் குவித்து சாதனை

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 48.5 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 280 ரன்கள் எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய ஏழு ஒருநாள் போட்டிகளில் 300 ரன்கள் மேல் அடித்து சாதனை படைத்தது உள்ளது. தற்போது நடப்பு உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது.
இங்கிலாந்து விளையாடிய மூன்று போட்டியில் இரண்டு போட்டிகளில் முதலில் களமிறங்கி 300 ரன்கள் மேல் அடித்து உள்ளது.முதலில் களமிறங்கிய இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உள்ளது.
373/3 (50) v Pak, Southampton
359/4 (44.5) v Pak, Bristol
341/7 (49.3) v Pak, Nottingham
351/9 (50) v Pak, Headingley
311/8 (50) v SA, The Oval
334/9 (50) v Pak, Nottingham
386/6 (50) v Ban , Sophia Gardens