பாகிஸ்தானின் மர்காசர் சரணாலயத்தில், 9 வருடங்களாக தனிமையில், கவான் யானை, கம்போடியாவுக்கு அனுப்பப்பட உள்ளது.
பாகிஸ்தானின் மரகாசர் சரணாலயத்தில், கடந்த 9 வருடங்களாக கவான் என்ற யானை தனியாக இருந்து வந்துள்ளது. 1985-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் மர்காசர் சரணாலயத்துக்கு இலங்கையிடமிருந்து இந்த யானை அன்பு பரிசாக அளிக்கப்பட்டது. சரணாலயத்தில் தனியாக இருந்த யானைக்கு துணையாக சாஹிலி என்ற யானை 1990ஆம் ஆண்டு அழைத்து வரப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் நிலவும் தட்பவெட்ப நிலை காரணமாக சாஹிலி என்ற யானை 2012ஆம் ஆண்டு உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து இந்த யானை தனிமையிலே இருந்து வந்ததால், தனிமையின் காரணமாக கவான் யானைக்கு அடிக்கடி மதம் பிடித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில வருடங்களாகவே , பாகிஸ்தானில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கவானை விடுதலை செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பிரதமர் இம்ரான்கானிடமும், இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,கவான் யானை இன்று கம்போடியாவுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த செய்தி விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், மர்காசர் சரணாலயங்களின் கவான் பிரிவு எங்களுக்கு நிச்சயம் வருத்தத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…