ஈபிள் கோபுரத்தை உருவாக்கிய அலெக்சாண்டர் கஸ்டவ் ஈபிள் மறைந்த தினம் இன்று
அலெக்சாண்டர் கஸ்டவ் ஈபிள் – Alexandre Gustave Eiffel, இவர் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி,1832 ஆம் ஆண்டு dijon நகரில் பிறந்தார். இவர் பிரான்சைச் சேர்ந்த பிரபல பொறியியலாளர் ஆவார். உலகப் புகழ் பெற்ற ஈபிள் கோபுரமும், பனாமா கால்வாயும் இவர் உருவாக்கியது. அலெக்சாண்டர் கஸ்டவ் ஈபிள் மறைந்த தினம் இன்று.
ஈபிள் தன்னுடைய படிப்பை முடித்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய மாமாவின் கடையில் வேலைக்கு சேர்ந்தார். பிறகு ஒரு உலோகங்களை உருக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார். 1866 ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்தார்.
கட்டிட பொறியாளரான அலெக்சாண்டர் கஸ்டவ் அதன் பிறகு ஈபிள் கோபுரத்தின் அடித்தளத்தை 1887ஆம் போட்டார், பிறகு 1889 ஆண்டு அது நிறைவுற்றது. உலகமே வியக்கும் ஈபிள் கோபுரத்தை மிகுந்த இடையூருக்கு மத்தியில் அலெக்சாண்டர் கஸ்டவ் ஈபிள் காட்டினார்.
இவர் ஈபிள் கோபுரம் மட்டும் இல்லாமல், இன்னும் பல அறிய கட்டிடங்களை கட்டியுள்ளார். டிசம்பர் 28 ஆம் தேதி 1923 ஆம் ஆண்டு பாரிஸில் உயிரிழந்தார். உலக அதிசயமாம் ஈபிள் கோபுரத்தை உருவாக்கிய கஸ்டவ் ஈபிள் புகழ், அவர் படைப்புகள் பூமியில் உள்ள வரை நிலைத்து நிற்கும்.