மக்கள் செல்வனின் ‘லாபம்’ படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்.!

Default Image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் டப்பிங் பணிகளை படக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று லாபம். எஸ். பி. ஜனநாதன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். ணி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் புகைப்படங்கள் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மேலும் வித்தியாசமான லுக்கில் விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெறும் தருணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. சமீபத்தில் அரசு படப்பிடிப்புகளுக்கு பிந்தைய பணிகளுக்கு அனுமதி வழங்கியதை அடுத்து, லாபம் படத்திற்காக விஜய் சேதுபதி தனது டப்பிங் பணிகளை இன்று முதல் துவங்கி உள்ளார். மேலும் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கலையரசன்  அவர்களும் டப்பிங்கை முடித்துள்ளார். தற்போது டப்பிங் பேசும் விஜய் சேதுபதி மற்றும் கலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்