ஆப்பிள் ஹெட்போனை விழுங்கிய நாய் – அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்!

Default Image

இங்கிலாந்தில் நாயொன்று விழுங்கிய ஆப்பிள் ஹெட்போனை அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இங்கிலாந்தில் வீட்டில் வளர்க்கப்பட கூடிய செல்லப்பிராணி நாய் குட்டி ஒன்று ஒரு ஜோடி ஆப்பிள் ஹெட்போன்களை அதன் சார்ஜருடன் சேர்த்து விழுங்கியுள்ளது. இங்கிலாந்தில் வசித்து வரக்கூடிய ரேச்சல் ஹூக் எனும் பெண் தனது செல்ல நாய்க்குட்டி ஜிம்மி ஹெட்போனை விழுங்கிவிட்டதாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த பொழுது வயிற்றுக்குள் ஒரு ஜோடி ஹெட் போன் இருப்பது தெரிய வந்துள்ளது. அது நாயின் வயிற்றுக்குள் இயங்கிக் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது

இது நாயின் உயிருக்கும் ஆபத்து என மருத்துவர்கள் கூறிய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறியதை அடுத்து நாயின் எஜமானி ஆகிய பெண்மணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மூலமாக அந்த ஹெட்போன்களை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இந்த நாய் ஹெட்போனை அதன் சார்ஜருடன் சேர்த்து விழுங்கியதால் அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்த பின்பும் அந்த ஹெட்போன் இயங்கி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்