கடலுக்கு அடியில் 2,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் , கப்பல் கண்டுபிடிப்பு !

Default Image

உலகில் பழமை வாய்ந்த கலாச்சாரமாக எகிப்தின் கலாச்சாரத்தை கூறப்படுகிறது.. தற்போது உள்ள எகிப்து நாட்டில் ஹெராக்லியான் என்ற இடத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் கடலுக்கு அடியில் இருந்து  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 மேலும் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட கோவில் உடன் நகைகள் மற்றும் நாயணங்கள் உள்ள ஒரு கப்பலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

இதேபோல் பழங்கால கட்டிடங்கள், மண்பாண்டங்கள் போன்றவைகளும் உள்ளனர்.இவை அனைத்தும் 2200 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. எகிப்து மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து இவைகளை  கண்டுபிடித்துள்ளனர்.

கடலில் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்களில் கி.பி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்பு நாணயங்கள் மற்றும் நகைகள் உள்ளன. கி.பி மூன்றாம் நூற்றாண்டில் இரண்டாம் டோலமி மன்னனின் ஆட்சிக்காலம் என கூறப்படுகிறது.

இந்த கடலில் கண்டுபிடிக்கப்பட்ட கோவில்கள் ,கப்பல்கள் மற்றும் கட்டிடங்கள், மண்பாண்டங்கள் அனைத்தும் நிலநடுக்கம் அல்லது சுனாமியால் கடலுக்கு அடியில் சென்று இருக்கலாம் என கூறபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்