திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த இயக்குனர்.!நடிகை புகார்.!
திருமணம் செய்வதாக கூறி தன்னை ஆயுஷ் திவாரி என்ற சீரியல் இயக்குனர் பாலியல் பலாத்காரம் செய்ததாக சீரியல் நடிகை புகார் அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் மராட்டியம் மற்றும் இந்தி மொழிகளில் பல சீரியல்களை இயக்கியவர் ஆயுஷ் திவாரி .அப்போது அவர் தனது தொடரில் நடித்து வந்த நடிகையை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் . திருமணம் செய்வதாகவும் கூறியுள்ளார்.இதனால் அந்த நடிகையும் அவரை நம்பி பல இடங்களில் உல்லாசமாகவும் இருந்துள்ளனர் .பல முறை அந்த இயக்குனர் நடிகையை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.
தற்போது இயக்குனர் நடிகையை திருமணம் செய்ய மறுப்பதாகவும் ,ஏதேதோ காரணங்களை கூறி தன்னை விட்டு விலகுவதாகவும் கூறி கடந்த நவம்பர் 26-ம் தேதி மும்பையின் வெர்சோவா காவல் நிலையத்தில் இயக்குனர் ஆயுஷ் திவாரி மீது 26 வயது மதிக்கத்தக்க பாதிக்கப்பட்ட நடிகை புகார் அளித்துள்ளார் .
தற்போது இயக்குனர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376(கற்பழிப்பு)-ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விரைவில் குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெர்சோவின் மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.