மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தின் டிரைலர் வெளியாகிய 24 மணி நேரத்தில் 4.3 மில்லியன் லைக்குகளை பெற்று ரெக்கார்ட் செய்துள்ளது.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத்
கடந்த ஜூன் 14அன்று மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தை டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 24ம் தேதி வெளியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். முகேஷ் சாப்ரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக சஞ்சனா சிங் நடித்திருந்தார் .தற்போது அவரது கடைசி படத்தினை பார்க்க ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியது.மேனி என்ற கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங்கும் ,கிஸி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சனாவும் நடித்துள்ளனர் . ஏ மேஜிக்கல் லவ் ஸ்டோரியான இந்த படத்தின் டிரைலரை ரசிகர்கள் சமுக வலைதளங்களில் #DilBecharaTrailer என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வந்தனர்.தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகிய 24 மணி நேரத்திற்குள் 4.3 மில்லியன் லைக்குகளை யூடுயூபில் பெற்று சாதனை படைத்துள்ளது.ஹோலிவுட் படமான Avengers:EndGame படத்தின் ரெக்கார்டையும் முறியடித்து முதல் இடத்தை டிரைலர் படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…