அமெரிக்காவை தனிமைப்படுத்த முடிவு..!
ஜி7 நாடுகள் மாநாட்டில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டதாக பிரான்ஸ் நிதி அமைச்சர் புருனோ லி மெய்ர் தெரிவித்துள்ளார்.
கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 25 சதவீதமும் அலுமினியப் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு அறிவித்தது.
இதையடுத்து கடந்த வெள்ளியன்று கனடாவில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் சந்திப்பில் ஜி6 பிளஸ் 1 என்பது போல் அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் நுச்சின் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டதாக பிரான்ஸ் நிதி அமைச்சர் புருனோ குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நடவடிக்கை சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அரசியலின்படி நியாயமற்றது என்றும், பொருளாதாரப்படி ஆபத்தானது என்றும் அவர் விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் வரிவிதிப்பால் பிற நாடுகளில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.