இத்தாலியில் முன்பைவிட நேற்று உயிரிழப்பின் எண்ணிக்கை 431 ஆக குறைவு.!

இத்தாலிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 3 வாரங்களை விட நேற்று உயிரிழப்பு எண்ணிக்கை 431 ஆக குறைந்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலியில் பரவி கொத்துக்கொத்தாக உயிரை கொன்று வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் திணறியது. இதனால் அந்நாட்டு பிரதமர் இங்கு சவப்பெட்டிகள் இல்லை, புதைப்பதற்கு இடமில்லை என்று கண்ணீர் விட்டு அழுதபடி கூறினார். அந்த அளவுக்கு கொரோனா அந்நாட்டை ஆட்டிப்படைக்கிறது. இந்த நிலையில் இத்தாலிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 3 வாரங்களை விட நேற்று உயிரிழப்பு எண்ணிக்கை 431 ஆக குறைந்துள்ளது.
உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,899 ஆகவும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,56,363 ஆகவும் உள்ளது. இத்தாலியில் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அவரச சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா தொற்று உச்சகட்டத்தை கடந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டமும் படிப்படியாக குறைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025