சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்திவருகிறது. உலக முழுவதும் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் அதிக பாதிக்கப்பட்ட நாடுகளான சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஈரான், ஸ்பெயின் போன்ற நாடுகளை மிஞ்சியது அமெரிக்கா. தற்போது அமெரிக்காவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 1,42,637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,485 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டு அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தடுமாறி வருகிறது.
இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய டிரம்ப், கொரோனா பரவல் தொடர்ந்து இருப்பதான் காரணமாக நாடு முழுவதுமான ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்றும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டு கொண்டார். இன்னும் 2 வாரங்களில் கொரோனாவால் இறப்பு விகிதம் உச்சநிலைக்கு செல்லும் என குறிப்பிட்டுள்ள அவர், அதிக உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்க சமூக விலகலை கடைபிடிப்பது அவசியம் என கூறியுள்ளார். மேலும் ஜூன் 1ம் தேதிக்கு பின்னர், கொரோனாவிலிருந்து நாம் முழுவதுமாக மீள்வோம் என குறிப்பிட்டார்.
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…