ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற காசாபா தாதாசாகேப் சாதவ் இறந்த தினம்.
காசாபா தாதாசாகேப் சாதவ், ஜனவரி 15-ஆம் தேதி 1926 ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவில், சாதார மாவட்டத்தில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த மற்போர் வீரர் ஆவார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மற்போர் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 1996 ஆம் ஆண்டு லியாண்டர் பயஸ் டென்னிஸில் வெண்கலப் பதக்கத்தை பெறும் வரை இதுவே இந்தியர்களின் ஒரே தனிநபர் பதக்கம் ஆகும்.
விருதுகள்
1993ம் ஆண்டில் மகராஷ்டிராஅரசு இவருக்கு சிவ் சத்ரபதி விருது வழங்கி கௌரவித்தது. 2001ம் ஆண்டில் மத்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. இரு விருதுகளும் சாதவ் இறந்து பல பத்தாண்டுகள் கழிந்த பின்னர் வழங்கப்பட்டன.
கௌரவிப்பு
புதுதில்லியில் புனரமைக்கப்பட்ட இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மல்யுத்த வளாகத்துக்கு ஒன்றிய அமைச்சகம் இவருடைய பெயரை சூட்டியுள்ளது. மேலும், இவரது வாழ்க்கையை ’பாக்கெட் டைனமோ’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இறப்பு
இவர் ஆகஸ்ட் 14-ம் தேதி, 1984-ம் ஆண்டு இம்மண்ணை விட்டு மறைந்தார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…